News August 9, 2025

மதுரை அருகே சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளம்பெண் பலி

image

திருமங்கலம் அண்ணாநகரை சேர்ந்தவர் கருப்பையா மகள் பாண்டிச்செல்வி (24). திருமங்கலம் அரசு கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். நேற்று சிக்கன் ரைஸ் கேட்டதால், அவரது சகோதரர் உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட பின் ஒவ்வாமை ஏற்பட்டு பாண்டிச்செல்வி வாந்தி எடுத்து மயங்கினார். பின்னர் திருமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Similar News

News November 12, 2025

மதுரை விளையாட்டரங்க வளாகத்தில் ஆட்சியர் ஆய்வு

image

மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள, மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் வரும் 28-11-2025 முதல் 10-12-2025 வரை 14வது ஹாக்கி இளையோர் உலகப்கோப்பை நடைபெற உள்ளதை முன்னிட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன் குமார் ஆய்வு செய்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

News November 12, 2025

மதுரை: PHH / AAY ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

மதுரை மக்களே மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதை பெறுவதற்க்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம்..அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க.. SHARE பண்ணுங்க..

News November 12, 2025

மதுரை : டிப்ளமோ போதும்; ரயில்வேயில் வேலை – APPLY!

image

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6.கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE . <<>>
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!