News September 30, 2025

மதுரை: அக்.31க்குள் வரி செலுத்தினால் 5% சலுகை

image

மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்: மதுரை மாநகராட்சி 2025-26 ஆம் ஆண்டில் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியினை அக்டோபர் 31ம் தேதிக்குள் செலுத்தும் சொத்து வரி உரிமையாளர்களுக்கு சொத்துவரி தொகையில் 5% சிறப்பு சலுகை (அதிகபட்சமாக ரூ 5 ஆயிரம்) வழங்கப்படும். எனவே மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 11, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (11.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 11, 2025

மதுரை: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

மதுரை இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News December 11, 2025

BREAKING: மதுரையில் 4 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

image

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் ஏறத்தாழ 4 இலட்சம் வாக்காளர்கள் இறந்தவர்கள், இரட்டை வாக்கு, வீடு மாற்றம், SIR படிவங்களை சமர்ப்பிக்காதது போன்ற காரணங்களால் நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 27 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர். இதில் ஒன்றரை இலட்சம் பேர் உயிரிழந்தது காரணமாக நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!