News May 3, 2024

மதுரையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு பதிவான அதிகபட்ச வெப்பநிலை

image

மதுரையில் நேற்று ( வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது. மதுரை மாவட்டத்தின் வெப்ப நிலை, அதிகபட்சமாக 107.6 டிகிரி பாரன்ஹீட் டாக ( 42 டிகிரி செல்சியஸ்) பதிவானது. கடந்த 2019ம் ஆண்டு மே 29ந் தேதி மதுரையில் 42 டிகிரி செல்சியஸ் பதிவான நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அதே அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Similar News

News November 16, 2025

மதுரை: சிறுமி கர்ப்பம்; வாலிபர் மீது போக்சோ

image

விளாச்­சேரியை சேர்ந்­த­ ரஞ்­சித்குமார்(27) மதுரை கொசவபட்­டியில் உள்ள குலதெய்­வம் கோயிலில், 17 வயது சிறுமியை திரும­ணம் செய்து கொண்­டார். இதனால் சிறுமி 5 மாத கர்ப்­பமா­னார். இதை அறிந்த மகளிர் ஊர் நல அலுவலர் பத்­மா இது குறித்து திருப்­பரங்குன்­றம் அனைத்து மகளிர் காவல் நிலை­யத்தில் புகார் செய்­தார். போலீசார் ரஞ்­சித்குமார் மீது போக்சோ சட்­டத்தில் இன்று வழக்கு பதிவு செய்து விசா­ரிக்கின்றனர்.

News November 16, 2025

மதுரை: 1,429 காலியிடங்கள்.. ரூ.71,900 வரை சம்பளம்

image

மதுரை மக்களே, தமிழ்நாடு சுகாதாரத்துறையில் (TN MRB) காலியாக உள்ள Health Inspector Grade-II பணிகளுக்கு 1429 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளியில் தமிழை ஒரு படமாக பயின்று தகுதியான படிப்பை முடித்தவர்கள் நவ. 16 (இன்று)-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.19,500 – ரூ.71,900. மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். இத்தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News November 16, 2025

மதுரை: மனைவியுடன் தகராறு… உயிரை மாய்த்த தொழிலாளி

image

உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லத்தை சேர்ந்­த­வர் சாம்பி­ரவேஷ் மகன் திவாகர்(37). இவர் கடச்­ச­நேந்­த­லில் தங்கி இருந்து பெயிண்டிங் வேலை பார்த்து வந்­தார். மனைவியு­டன் ஏற்­பட்ட கருத்து வேறு­பாடு கார­ண­மாக மன­மு­டைந்து பெயிண்­டில் கலக்கும் டர்­பைண்­டன் ஆயிலை உட­லில் ஊற்றி தீ வைத்து கொண்­டார். மருத்து­வம­னையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்­தார். கோ.புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!