News November 19, 2025

மதுரையில் வேலை; 12ம் தேர்ச்சி போதும் – தேர்வு கிடையாது!

image

மதுரை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Assistant/Computer Operator பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12th, Diploma தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு <>தபால்<<>> மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்கும் நாள் 04-11-2025 முதல் 21-11-2025 வரை. தேர்வு கிடையாது, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு Rs.11,916 வரை சம்பளம் வழங்கப்படும். *ஷேர் பண்ணுங்க

Similar News

News January 25, 2026

மதுரை: பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

image

திருமங்கலம் எஸ்ஐ பாஸ்கரன் நேற்று வேதக்குளம் பகுதியில் போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அதில் சோனை கோவில் அருகே சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதையடுத்து சுங்குராம் பட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி(39), பாலகிருஷ்ணன்(51), செங்குளம் சக்திவேல்(56) ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.10,000 மற்றும் சீட்டுக்கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News January 25, 2026

மதுரையில் அமையும் மின்னல் ஆய்வு மையம்

image

தமிழகத்தில் மின்னல் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து மதுரை, கோவையில் மின்னல் தரவு திரட்டுதல், ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசின் இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News January 25, 2026

மதுரை: ஜீப்பிலிருந்து ஆண் சடலம் மீட்பு – பரபரப்பு

image

மேலூர் – சிவகங்கை சாலையில், மலம்பட்டி அருகே கணேஷ் பெட்ரோல் பங்க் உள்ளது. இதன் பின்புறம் பயன்படுத்தப்படாத பழைய வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும். அங்கிருந்து துர்நாற்றம் வீசவே அருகில் சென்ற பார்த்த போது நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருந்த ஜீப் ஒன்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!