News November 19, 2025

மதுரையில் வாலிபர் ஓட ஓட விரட்டி கொலை

image

மதுரை, எம்.கே.புரத்தில் பல வழக்குகள் உள்ள முத்துமணி போஸ்(28) நேற்று இரவு அப்பகுதி மதுபான கடையில் மது அருந்தும் போது அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறாக மாறியது. அப்போது முத்துமணி போஸ் ஒருவரை தாக்கியுள்ளார். ஆத்திரமுற்ற அந்த நபர் தனது நண்பர்களை அழைத்து வந்து முத்துமணியை ஓட ஓட விரட்டி, ஆயுதங்களால் தாக்கியும் தலையில் கல்லை போட்டும் கொலை செய்தனர். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News January 13, 2026

மதுரை: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

image

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800-425-3993 அழைக்கவும். (SHARE பண்ணுங்க)

News January 13, 2026

மதுரையில் பிறந்த 10 நாளான குழந்தை உயிரிழப்பு

image

உசிலம்பட்டி அருகே நல்ல தேவன்பட்டியை சேர்ந்தவர் ராஜாராம் மனைவி பரமேஸ்வரி(31). இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை உசிலம்பட்டி மருத்துவமனையில் பிறந்தது. இரவு குழந்தைக்கு பால் கொடுத்து தொட்டிலில் தூங்க வைத்து உள்ளனர். நேற்று காலையில் எழுந்து பார்த்த போது, குடித்த பாலை கக்கி மூச்சுத் திணறி குழந்தை தொட்டிலில் இறந்து கிடந்தது. இதுக்குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை.

News January 13, 2026

மதுரை: இனி Phone மூலம்.. ரேஷன் கார்டு APPLY..

image

மதுரை மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்கார்டு கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <>க்ளிக் செய்து <<>>செயலியை பதிவிறக்கம் செய்து ஆதார் எண் மட்டும் பதிவு பண்ணா போதும்.. உங்க ரேஷன் கார்டு காண்பிக்கும். அதை பதிவிறக்கம் செய்யுங்க. இதுல நீங்க என்னென்ன பொருள் வாங்கி இருக்கீங்கன்னு பாத்துக்கலாம். கார்டு தொலைந்தவர்களும் ரேஷன் கார்டை டவுன்லோட் பண்ணிக்கலாம். SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!