News November 19, 2025

மதுரையில் வாலிபர் ஓட ஓட விரட்டி கொலை

image

மதுரை, எம்.கே.புரத்தில் பல வழக்குகள் உள்ள முத்துமணி போஸ்(28) நேற்று இரவு அப்பகுதி மதுபான கடையில் மது அருந்தும் போது அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறாக மாறியது. அப்போது முத்துமணி போஸ் ஒருவரை தாக்கியுள்ளார். ஆத்திரமுற்ற அந்த நபர் தனது நண்பர்களை அழைத்து வந்து முத்துமணியை ஓட ஓட விரட்டி, ஆயுதங்களால் தாக்கியும் தலையில் கல்லை போட்டும் கொலை செய்தனர். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News January 25, 2026

மதுரை: VOTER ID ல இத மாத்தனுமா?

image

மதுரை மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.

இங்கு <>கிளி<<>>க் செய்யுங்க.

1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.

2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.

3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.

4.போட்டோ மாற்றம்

5.புது போட்டோவை பதிவிறக்கவும்

15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 25, 2026

மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், திருவாதவூர் கிராமத்தில் உள்ள மாணிக்கவாசகர் கோயில் வளாகத்தில், வரும் 28.01.2026 அன்று காலை சுமார் 10 மணியளவில் வட்ட அளவிலான மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் மேலூர் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

News January 25, 2026

மதுரை மண்டலத்தில் பி.எப். குறைதீர் முகாம்

image

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) நிறுவனம் சார்பில், குறைதீர் முகாம் மதுரை மண்டலத்தில் ஜனவரி 27-இல் நடைபெறுகிறது. மதுரை மண்டலத்துக்குட்பட்ட மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், பழனி, தேனி, விருதுநகர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டக் கிளை அலுவலகங்களில் குறைதீர் முகாம் ஜன 27-ம் ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது.

error: Content is protected !!