News March 27, 2024
மதுரையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் திருக்கல்யாணம் மற்றும் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு மார்ச் 28, 29 ஆகிய 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்து மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி திருநகரிலிருந்து மதுரை நகருக்குள் வரும் வாகனங்கள், கிரிவல பாதை மற்றும் தி.குன்றம் மேம்பாலத்தில் செல்வதற்கு அனுமதி இல்லை எனவும் வாகனங்கள் அனைத்தும் GST சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News January 24, 2026
மதுரைக்கு மாவட்டத்தில் புதிதாக மேம்பாலங்கள்?

தற்போது நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, கேள்வி நேரத்தில் மதுரைக்கு தெப்பக்குளம், விரகனூர் மற்றும் மாட்டுத்தாவணி ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் எ.வ.வேலு மேற்குறிப்பிட்ட பகுதிகளில் பாலம் அமைக்க ஆய்வு பணிகள் முடிந்து அடுத்த வருடம் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். (இது குறித்து உங்கள் கருத்து)
News January 24, 2026
மதுரை: கொடூரமாக வெட்டி கொலை; 5 பேர் கைது

மேலூர், வெள்ளரிப்பட்டி முன்னமலைபட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன்(48), நேற்று முன்தினம் இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். பழிக்கு பழியாக நடைபெற்ற இக்கொலை தொடர்பாக மேலூர் போலீசார் அதே பகுதியை சேர்ந்த விஜய் சுந்தர்(29) அவரது நண்பர்கள் பிரசாந்த், கணேஷ் குமார் என்ற கருப்புசாமி, ஆண்டிச்சாமி, அஜித் குமார், ஆகிய 5 பேரை நேற்றிரவு கைது செய்தனர். பின் மேலூர் ஜேஎம்.கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
News January 24, 2026
மதுரை : EXAM இல்லை, போஸ்ட் ஆபீஸில் வேலை!

மதுரை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கு <


