News August 4, 2024

மதுரையில் ஒரே நாளில் ரூ.8.72 கோடி வருவாய்

image

மதுரையில் நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு சனிக்கிழமை நாளிலும் பத்திரப்பதிவு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 52 சார் பதிவாளர் அலுவலங்களில் ஒரே நாளில் 1465 பத்திரங்கள் பதிவாகின. இதன் மூலம் ரூ.8.72 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட அதிகம். மேலும், 2024 ஏப்.,1 முதல் நேற்று வரை 99 ஆயிரத்து 732 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.367.35 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

Similar News

News January 25, 2026

மதுரை: பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

image

திருமங்கலம் எஸ்ஐ பாஸ்கரன் நேற்று வேதக்குளம் பகுதியில் போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அதில் சோனை கோவில் அருகே சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதையடுத்து சுங்குராம் பட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி(39), பாலகிருஷ்ணன்(51), செங்குளம் சக்திவேல்(56) ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.10,000 மற்றும் சீட்டுக்கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News January 25, 2026

மதுரையில் அமையும் மின்னல் ஆய்வு மையம்

image

தமிழகத்தில் மின்னல் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து மதுரை, கோவையில் மின்னல் தரவு திரட்டுதல், ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசின் இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News January 25, 2026

மதுரை: ஜீப்பிலிருந்து ஆண் சடலம் மீட்பு – பரபரப்பு

image

மேலூர் – சிவகங்கை சாலையில், மலம்பட்டி அருகே கணேஷ் பெட்ரோல் பங்க் உள்ளது. இதன் பின்புறம் பயன்படுத்தப்படாத பழைய வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும். அங்கிருந்து துர்நாற்றம் வீசவே அருகில் சென்ற பார்த்த போது நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருந்த ஜீப் ஒன்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!