News August 8, 2025
மதுரையில் உணவு தங்குமிடதுடன் இலவச பயிற்சி

திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் ஆக. 18 முதல் ஒரு மாதத்திற்கு எலக்ட்ரிகல் வயரிங், சர்வீசிங் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் இம்முகாமில் இருபாலர்கள், திருநங்கைகள் பங்கேற்கலாம். விருப்பமுள்ளவர்கள் 96262 46671ல் முன்பதிவு செய்து கொள்ளலாம். உணவு, தங்குமிடம் இலவசம். சுய தொழில் செய்ய விரும்புவோருக்கு SHARE செய்யவும்.
Similar News
News November 17, 2025
மதுரை: டூவீலரில் சென்ற பெண் கீழே விழுந்து பலி

திருமங்கலம் அருகே உச்சப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் அவரது மனைவி செல்வி(41). இவர்கள் இருவரும் பைக்கில் கப்பலூர் காமராஜர் கல்லூரி அருகே நேற்று சென்ற போது, பின்னால் அமர்ந்திருந்த செல்வி திடீரென தவறி
விழுந்தார். அடிபட்ட அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருமங்கலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News November 17, 2025
மதுரையில் இன்று, நாளை இங்கெல்லாம் மின்தடை.!

மதுரை, மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (நவ.17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சோழவந்தான் பகுதியிலும் நாளை மேலூர், கொட்டம்பட்டி, பேரையூர், சின்னகட்டளை, எழுமலை, உசிலம்பட்டி, தும்மைகுண்டு, திருவாதவூர், நாட்டார்மங்கலம், , நரசிங்கம்பட்டி, A.வள்ளலாளபட்டி,மேலவளவு, தனியாமங்கலம், வாடிப்பட்டி, நரசிங்கம்பட்டி மற்றும் இதன் சுற்றுபகுதிகளில் மின்தடை ஏற்படும். SHARE பண்ணுங்க.
News November 16, 2025
மதுரை: டிகிரி போதும்; உள்ளூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

தமிழக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், மதுரையில் உள்ள Royal Enfield நிறுவனத்தில் Sales Executive பணியிடங்களுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-35 வயது வரை உள்ள டிகிரி முடித்தவர்கள் <


