News November 25, 2025
மதுரையில் ஆசிரியர் மீது தாக்குதல்

மதுரை, மாடக்குளத்தை சேர்ந்த தம்பதியினர் ராமகிருஷ்ணன்(36), ஜஸ்டின் ஸ்டெல்லாமேரி. இருவரும் வெவ்வேறு தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக உள்ளனர். ராமகிருஷ்ணன் சக ஆசிரியை ஒருவருடன் திருமணம் மீறிய உறவில் இருப்பதை அறிந்து மேரி கேட்டபோது, 3 பேரும் சேர்ந்து வாழ்வோம் என்று இராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த மேரியை, ராமகிருஷ்ணன் கடுமையாக தாக்கினார். மேரியின் புகாரில் SS காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 25, 2026
மதுரை: ஜீப்பிலிருந்து ஆண் சடலம் மீட்பு – பரபரப்பு

மேலூர் – சிவகங்கை சாலையில், மலம்பட்டி அருகே கணேஷ் பெட்ரோல் பங்க் உள்ளது. இதன் பின்புறம் பயன்படுத்தப்படாத பழைய வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும். அங்கிருந்து துர்நாற்றம் வீசவே அருகில் சென்ற பார்த்த போது நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருந்த ஜீப் ஒன்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 25, 2026
மதுரை: ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News January 25, 2026
தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு சிறப்பு ரயில்

மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தைப்பூசத் திருவிழாவையொட்டி ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், மதுரை-பழனி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து பிப்.1 அன்று காலை 6 மணிக்கு புறப்படும் (06145) சிறப்பு ரயில் காலை 8.30 மணிக்கு பழனியை சென்றடையும். பழனியிலிருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு மாலை 5.00 மணிக்கு மதுரை வந்தடையும்.


