News June 1, 2024

மதுபான கடைகள் மூட உத்தரவு

image

தருமபுரி மாவட்டத்தில் மக்களவை பொது தேர்தல்-2024 வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 04.06.2024 அன்று நடைபெறவுள்ளது. இதனால், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அனைத்து மதுபான கடைகளும் அன்று மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மீறி மதுபான கடைகள் செயல்பட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Similar News

News July 8, 2025

நலத்திட்டங்களை வழங்கிய உழவர் நலத்துறை அமைச்சர்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் புதிய கூடுதல் அலுவலகத்தில் வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் .எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

News July 7, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம்

image

தர்மபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் மாற்றத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி பொறுப்பு அமைச்சரும், தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்துகொண்டு மூன்று சக்கர வாகனங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி சிறப்பித்தார்.

News July 7, 2025

தர்மபுரி போலீசாரின் இரவு ரோந்து பணி விவரம்

image

தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில் இன்று (ஜூலை 07, 2025) இரவு ரோந்து பணிக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட இரவு ரோந்து அலுவலராக எம். ரவிச்சந்திரன் செயல்படுவார். தர்மபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு ஆகிய பகுதிகளுக்கு காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவிக்கு அவர்களின் மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன; தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!