News September 29, 2025
“மக்கள் உயிரிழப்புக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும்”

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “கரூரில் தவெக பிரச்சாரத்தில் பலர் உயிரிழந்தனர். பிரச்சாரத்தின் போது அனைத்து பாதுகாப்புகளோடு அவருடைய பிரச்சார பயணத்தை அவர் தொடங்கி இருக்க வேண்டும். அப்பாவி மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இது அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்திற்கு விஜய் மற்றும் தவெக கட்சியை சேர்ந்தவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.”
Similar News
News November 11, 2025
புதுவையில் குட்கா விற்ற பெண் கைது

திருபுவனை அடுத்த கொத்தபுரிநத்தம் சாலையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில், திருபுவனை போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் 1150 பாக்கெட் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர் ஜெயலட்சுமி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் திருவாண்டார்கோயில் கொத்தபுரிநத்தம் சாலை, சன்னியாசி குப்பம் சாலை உள்ள கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
News November 11, 2025
புதுவையில் மூதாட்டி தற்கொலை-போலீசார் விசாரணை

வில்லியனுார், தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மனைவி வச்சலா. இவர் கடந்த சில ஆண்டுகளாக ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அவ்வப்போது உடல் நிலை மோசமானதால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் வச்சலாவிற்கு திடீர் என வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த வச்சலா நேற்று இரவு வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து வில்லியனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 11, 2025
வில்லியனூர் பகுதியில் மின்தடை அறிவிப்பு

வில்லியனுர் – மரப்பாலம் மின்பாதையில் இன்று (நவ.11) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். இதன் காரணமாக இன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை தக்ககுட்டை, திருமலை தாயார் நகர், திருமலை வாசன் நகர், மூலகுளம், உழவர்கரை, சிவகாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


