News August 6, 2024

மக்களைத் தேடி மருத்துவம் 4ஆம் ஆண்டு தொடக்க விழா

image

சூளகிரி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் கடந்த 5.8.2021 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்து நேற்று 4ஆம் ஆண்டு விழா நடந்தது. இதில் ஆட்சியர் பேசுகையில் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 5 லட்சத்து 43 ஆயிரத்து 162 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர் என்றார். இதில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் உடன் இருந்தார்.

Similar News

News January 13, 2026

கிருஷ்ணகிரி: முற்றிலும் இலவசம்… செம வாய்ப்பு

image

தமிழக அரசு சார்பில் ஏழை, விதவை, கணவன்&சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுகிறது. இதன்படி, தையல் எந்திரம் & துணை சாதனங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதற்கு அருகில் உள்ள பொதுசேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.*செம திட்டம். தெரிந்த பெண்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News January 13, 2026

கிருஷ்ணகிரி: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

கிருஷ்ணகிரி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<>Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 13, 2026

கிருஷ்ணகிரியில் ரிக் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

image

கிருஷ்ணகிரியில் ரிக் உரிமையாளர்கள் நேற்று (ஜன.13) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரிக் தொழிலில் உதிரி பாகங்கள், ஆயில், டீசல் உள்ளிட்டவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட ரிக் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஹைதர் அலி கூறியுள்ளார்.

error: Content is protected !!