News August 20, 2024
மக்களுடன் முதல்வர் முகாம் – ஆட்சியர்

மக்களுடன் முதல்வர் முகாம் வரும் 22ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் அக்ராவரம் படவேட்டம்மன் கோயில் எதிரிலும், திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் மாம்பாக்கம் அரம் திருமண மண்டபத்திலும், அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் குருராஜபேட்டை அரசு உ.பள்ளியிலும், நெமிலி ஊராட்சி ஒன்றியம் பள்ளூர் அரசு நடுநிலைப் பள்ளியிலும் நடக்கிறது என ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News January 19, 2026
ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் நியமனம்!

ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவராக அரக்கோணத்தை சேர்ந்த நரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நேற்று (ஜன.18) வெளியிட்டது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் நரேஷ் குமாருக்கு கட்சி நிர்வாகிகள் இன்று (ஜன.19) நேரிலும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
News January 19, 2026
ராணிப்பேட்டை: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 19, 2026
ராணிப்பேட்டை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நாளை (ஜன.20) ராணிப்பேட்டை கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் இக்கூட்டம் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ராணிப்பேட்டை செயற் பொறியாளர் எஸ்.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.


