News July 11, 2024
மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

வெள்ளோட்டில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . இத்திட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.
Similar News
News July 9, 2025
ஈரோட்டில் இன்றைய வெப்பம் பதிவு

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் கனமழை பெய்து வந்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. இருப்பனும், அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த பின் ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் வெயிலின் காணப்படுகிறது. இந்நிலையில், இன்று ஜூலை.09 ஈரோட்டில் 38.6° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
News July 9, 2025
ஈரோட்டில் அருமையான வேலை வாய்ப்பு!

ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Sales Person பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News July 9, 2025
ஈரோடு: தம்பதி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

சிவகிரி, தம்பதி ராமசாமி, பாக்கியத்தை ஏப்ரல் 28 தேதி கொலை செய்த கும்பல், வீட்டிலிருந்த 10 பவுன் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றது. முன்னதாக சிவகிரி இரட்டைக் கொலை, திருப்பூா் மூவா் கொலை வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ள ஆச்சியப்பன், மாதேஷ்வன், ரமேஷ் ஆகியோரிடம் காவல்துறையினரும் சிபிசிஐடி அதிகாரிகளும் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.