News July 11, 2024
மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்

உடுமலை அருகே சோமவாரப்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி இன்று துவக்கி வைத்தனர். அப்போது பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் ஆட்சித்தலைவர், பொள்ளாச்சி எம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News July 8, 2025
தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோயில்!

திருப்பூர் தாளக்கரையில் பழமையான லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் நரசிம்மரை, பிரதோஷ நாளான இன்று, பால், இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபட்டால், தீராத கடன் தொல்லைகள் தீருமாம். கடன் தொல்லையில் சிக்கியுள்ள உங்கள் நண்பர்களுக்கு இத SHARE பண்ணுங்க.
News July 8, 2025
டிகிரி, இன்ஜினியர் படித்தவர்களுக்கு அரசு வேலை

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ, இன்ஜினியரிங், டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு திருப்பூரில் வரும் 31-ம் தேதி நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு <
News July 8, 2025
ரிதன்யா கணவர் ஜாமின் மனு தள்ளுபடி

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான ஆடியோ வெளியான நிலையில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார் மற்றும் அவரது தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில்ம் திருப்பூர் மாவட்டம் முதன்மை நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.