News January 19, 2026
மகாத்மா காந்தி பொன்மொழிகள்

*நீ உலகில் காண விரும்பும் மாற்றமாக நீயே மாறு. *அஹிம்சை என்பது மனிதகுலத்திற்கு கிடைத்த மிகப் பெரிய சக்தி. *எதிரியை அழிப்பதற்கு அல்ல, அவரது மனதை மாற்றுவதற்கே போராடு. *சுதந்திரம் என்பது விரும்பியதை செய்வது அல்ல; சரியானதை செய்வதே. *ஒரு தேசத்தின் முன்னேற்றம், அது பெண்களை எப்படி நடத்துகிறது என்பதிலே தெரியும்
Similar News
News February 16, 2026
அதிமுகவில் இணைய விரும்பும் மு.க.அழகிரியின் வலதுகரம்

2026 தேர்தல் நெருங்கும் நிலையில் பல கட்சிகளின் மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் வேறு கட்சிக்கு தாவி வருகின்றனர். இந்நிலையில் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரும் Ex துணை மேயருமான பி.எம்.மன்னன் தனது ஆதரவாளர்களுடன் EPS முன்னிலையில் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தலைமையில் இருந்து அழைப்பு வந்தால் சேர விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
News February 16, 2026
இவர்கள் கண்டிப்பா Eyebrow த்ரெட்டிங் செய்யக்கூடாது

முகம் வடிவாக தெரியவேண்டும் என்பதற்காக நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பெரும்பாலான பெண்கள் புருவத்தை த்ரெட்டிங் செய்கின்றனர். ஆனால், முகத்தில் பரு, ராஷஸ் பிரச்னைகள் இருப்பவர்கள் இதனை செய்யக்கூடாது என டாக்டர்கள் சொல்கின்றனர். அப்படி செய்தால் பருக்கள் அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறதாம். எனவே இந்த தவறை செய்யாதீங்க பெண்களே. நீங்கள் அக்கறை கொண்டுள்ள சக பெண்களுக்கும் SHARE THIS.
News February 16, 2026
பிப்.20-ல் கில்லி படம் மீண்டும் ரீ-ரிலீஸ்

விஜய்யின் கரியரில் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றான கில்லி 2-வது முறையாக ரீ-ரிலீசாகிறது. 2024 ஏப்ரலில் ரீ-ரிலீசான கில்லி ₹20 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இந்நிலையில், தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 20-ம் தேதி கில்லி ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக படத்தின் விநியோகஸ்தர் அறிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். யாருக்கெல்லாம் கில்லி பிடிக்கும்? கமெண்ட் பண்ணுங்க


