News December 13, 2025
மகளிர் முன்னேற்றத்தின் பொற்காலம்: CM ஸ்டாலின்

எதிர்காலத்தில் வரலாற்றை எழுதும்போது மகளிர் முன்னேற்றத்தின் பொற்காலம், ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் இருந்து தொடங்கியது என்று எழுதுவார்கள் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், தன் சகோதரிகளுக்கு தனது திட்டங்கள் திராவிட மாடல் 2.0-விலும் தொடரும் என உறுதிப்படக் கூறியுள்ளார். தலைமுறைகள் தழைக்க பெண் கல்வி அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
Similar News
News January 25, 2026
₹1,200 பென்ஷன் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

சிறப்பு ஓய்வூதியம் பெற்றுவரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் உயிரிழந்தால், குடும்ப ஓய்வூதியமாக ₹1,200 வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். குறு அங்கன்வாடி பணியாளர்கள், வன களப்பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் உயிரிழந்தால் குடும்ப ஓய்வூதியமாக ₹1,100 வழங்கப்படும் எனவும் CM பேரவையில் அறிவித்தார்.
News January 25, 2026
ஆட்சியில் பங்கு: ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன ராகுல்

ஆட்சியில் பங்கு தர வேண்டும் எனப் பேசி, திமுக-காங்கிரஸ் கூட்டணி சர்ச்சையில் மையப்புள்ளியாக இருந்தவர் மாணிக்கம் தாகூர். இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான கருத்துகளை பொதுவெளியில் பேசக்கூடாது என ராகுல் தெரிவித்ததாக மாணிக்கம் தாகூர் MP கூறியுள்ளார். மேலும், இதுதொடர்பாக தனது கருத்துகளை ராகுலிடம் தெளிவாக விளக்கிவிட்டதாகவும் அவர் பேசியுள்ளார்.
News January 25, 2026
WhatsApp-ல் வரும் புது வசதிகள்!

WhatsApp-ல் இனி பெற்றோர்கள், ‘Secondary Accounts’ வசதி மூலம் தங்களது குழந்தைகளுக்கு தனி அக்கவுண்ட்கள் உருவாக்கலாம். இந்த அக்கவுண்ட்களுக்கு தனி Status கிடையாது. அதேபோல, Contacts-ல் இல்லாதவர்களுடன் Chat பண்ண முடியாது. மெசேஜ் வசதியை குழந்தைகளுக்கு பெற்றாலும், அறிமுகமில்லாதவர்களுடன் பேசுவது, தவறான மெசேஜ்கள் வருவது போன்ற அபாயங்களைத் தவிர்க்கவும் இந்த Parenting Control அளிக்கப்படுகிறது.


