News October 9, 2024
போலீசார்- சாம்சங் ஊழியர்கள் இடையே தள்ளுமுள்ளு

சங்கார்ச்சத்திரம் அருகே இயங்கி வரும் சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை பந்தல் அகற்றப்பட்ட போதிலும், ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போலீசார் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியபோது, இரு தரப்புக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், இரு ஊழியர்கள் மயக்கமடைந்தனர். அவர்களை அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
Similar News
News November 13, 2025
காஞ்சி: கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞன் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே வெங்குடி கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்ற இளைஞன் கிதிரிப்பேட்டை பகுதியில் உள்ள தைலன் தோப்பு பகுதியில் தமிழக அரசு தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இதைப்பற்றி நேற்று மதுவிலக்கு போலீசருக்கு கிடைத்த தகவலின் படி சோதனை மேல் கொண்டதில் அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
News November 13, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
நவ.19ம் தேதி மாற்றுத்திறனாளி குறைதீர்க்கும் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட, மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியரின் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வரும் நவ.19 புதன்கிழமை அன்று மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் சிறப்பு கூட்டம் நடைபெறுகின்றது.


