News April 16, 2024
போலீசாருக்கு நாகை எஸ்.பி. உத்தரவு

நாகை: தேர்தலின் போது வாக்குசாவடிகளில் பணியாற்றும் போலீசார் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களிடம் கடுமையான வார்த்தைகளை பேசகூடாது,
வாக்காளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கனிவுடன் பதில் கூற வேண்டும். கோபமான வார்த்தைகளால் வாக்கு மையத்தில் பிரச்சனை எழுந்து விடாமல் போலீசார் பணியாற்ற வேண்டுமென நாகை போலீஸ் எஸ்.பி ஹர்சிங் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 7, 2025
நாகை: மாவட்ட ஆட்சியர் தகவல் அறிவிப்பு!

நாகை மாவட்டத்தில் 1,13,453 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை சுமார் 96,785 மெ.டன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்கு, ஆலைகள் மற்றும் மண்டலங்களுக்கு இயக்கம் செய்யப்பட்டது. மீதமுள்ள 16,667 மெ.டன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, நகர்வு பணிகள் நடைபெற்றுவருகிறது என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
நாகை: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கை முடக்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
*உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
*ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
*விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT
News November 7, 2025
நாகை : திருமணத்திற்கு 1 பவுன் தங்கம், ரூ.25,000!

1. நாகை மாவட்ட மக்களே, ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000 பணம் & 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
2. இதற்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை அணுக வேண்டும்.
3. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.
4. திருமணத்திற்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
5. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!


