News August 17, 2025
போலி இ-சலான் இணையதளங்கள்: திருப்பூர் காவல்துறை எச்சரிக்கை!

வாகன ஓட்டிகளே! போலியான இ-சலான் இணையதளங்கள் குறித்து திருப்பூர் காவல்துறை எச்சரித்துள்ளது. https://echallanparivahan.in/ போன்ற போலியான தளங்களைத் தவிர்க்கவும். அதிகாரப்பூர்வமான https://echallan.parivahan.gov.in/ என்ற இணையதளத்தை மட்டுமே பயன்படுத்துங்கள். இதே போன்ற மோசடிச் செய்திகள் வந்தால், உடனடியாக 1930 என்ற எண்ணில் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளியுங்கள். (ஷேர் பண்ணுங்க)
Similar News
News December 10, 2025
ஆட்சி மொழி சட்டம் வார விழா

திருப்பூர் மாவட்டத்தில் ஆட்சி மொழி சட்ட வார விழா டிச.17 முதல் 26-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. சட்டம் இயற்றப்பட்ட நாளான 27.12.1956ஐ நினைவுகூரும் வகையில், கலெக்டர் அலுவலகத்தில் விழா தொடங்குகிறது. இந்த வாரத்தில் அரசு ஊழியர்கள், மாணவர்கள், வணிகர்களுக்கு சட்டம் குறித்து பயிற்சி, கருத்தரங்குகள், விழிப்புணர்வுக் கூட்டங்கள் மற்றும் பேரணி நடத்தப்படவுள்ளது என திருப்பூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
திருப்பூர்: இரவு ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (10.12.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் அவிநாசி காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்
News December 10, 2025
திருப்பூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதனை அனைவருக்கும் ஷேர் செய்ங்க.


