News August 19, 2024

போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் பிடிப்பு

image

தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் பணிபுரியும் ஊழியர்கள் இன்று அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 22-ஆம் தேதி முதல் மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். வேலைக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சம்பளத்தை பிடிக்குமாறு பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News January 19, 2026

சென்னை: எமனாக மாறிய கோயில் விளக்கு!

image

சென்னை கோடம்பாக்கம், பாரதீஸ்வரர், 5-வது தெருவை சேர்ந்தவர் சாந்தி (70). இவர், அங்குள்ள பாரதீஸ்வரர் சிவன் கோயிலுக்கு உறவினர் ஜெயந்தியுடன் சென்றார். சாந்தி, சாமி தரிசனம் செய்துவிட்டு கோயில் வளாகத்தில் அகல் விளக்குஏற்றியபோது விளக்கில் எரிந்த தீயில் அவரது சேலை பட்டதால், தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது. தீயில் கருகிய சாந்தியை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

News January 19, 2026

கடற்கரைகளில் குப்பை கொட்டிய 241 பேருக்கு ரூ.1.90 லட்சம் அபராதம்

image

சென்னை மெரினா உள்ளிட்ட முக்கிய கடற்கரைகளில், குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடாமல் விதிகளை மீறிய தனிநபர்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களுக்கு, 15.01.26 முதல் 17.01.26 வரை 26 கண்காணிப்புக் குழுக்கள் மூலம் ரூ.1,90,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்தம் 241 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!