News August 5, 2024
போதைப் பொருட்கள்தான் கொலைகளுக்கு காரணம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி. அதிமுக ஆட்சியிலும் கொலைச் சம்பவங்கள் நடந்தன. இதைத்தடுக்க திமுக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசியல் தலைவர்கள் பாதுகாப்போடு இருக்கின்றனர். போதைப் பொருட்கள் தான் இதுபோன்ற கொலை சம்பவங்களுக்கு காரணமாக அமைகிறது” என்றார்.
Similar News
News January 17, 2026
சென்னை: தலை நசுங்கி கல்லூரி மாணவன் பலி!

சென்னை, மாதவரத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (20). கல்லூரி மாணவரான இவர், நேற்று மதியம் பாடிக்குப்பம் சாலையில் டூவீலரில் சென்ற போது முன்னால் சென்ற தண்ணீர் லாரியை முந்திச்செல்ல முயன்றார். அப்போது லாரியின் மீது டூவீலர் உரசி நிலைதடுமாறி கீழே விழுந்ததில், லாரியின் சக்கரம் மாணவர் மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி உயிரிழந்தார். இது குறித்து போலீசார், லாரி டிரைவர் வெங்கடேசனை (56) கைது செய்து விசாரிக்கின்றனர்.
News January 17, 2026
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் (ஜன.16) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.