News November 25, 2025
போக்குவரத்து ஊழியர்களுக்கு ₹860 கோடி பணப்பலன்

போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்க ₹860 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 2024 மே – ஜூலை வரை ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள், பணிக்காலத்தில் மரணமடைந்தவர்களுக்கு பணப்பலன் வழங்குவதற்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றவர்களுக்கு பல ஆண்டுகளாக பணப்பலன் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 19, 2026
கூட்டணி விவகாரத்தில் விஜய் ஏமாற்றம்!

ஆட்சியில் பங்கு என அறிவித்தபிறகும் விஜய்யுடன் தற்போது வரை ஒரு கட்சி கூட கூட்டணி அமைக்கவில்லை என்பது அக்கட்சி நிர்வாகிகள் சிலரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாம். குறிப்பாக அதிமுக, பாஜகவிலிருந்து வந்த சிலர் மீண்டும் தங்களது தாய் கழகத்திற்கே திரும்பலாமா என்ற எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தவெகவுடன் இணைவார் எனக் கூறப்பட்ட <<18891552>>TTV தினகரன்<<>>, NDA-வில் மீண்டும் இணைய முடிவு செய்துள்ளாராம்.
News January 19, 2026
காங்கிரஸில் 71 மாவட்ட தலைவர்கள் மாற்றம்

TN காங்கிரஸில் அதிரடி மாற்றம் செய்து தேசிய தலைமை அறிவித்துள்ளது. உட்கட்சி பூசல், கூட்டணி விவகாரம், ஆட்சியில் பங்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாநிலத் தலைமையின் உத்தரவையும் மீறிப் பல நிர்வாகிகள் பொதுவெளியில் பேசி வந்தனர். இந்நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் கார்கே, ராகுல் உள்ளிட்டோரின் ஆலோசனைக்கு பிறகு 71 மாவட்டத் தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இந்த மாற்றம் காங்கிரஸுக்கு ‘கை’ கொடுக்குமா?
News January 19, 2026
நாளை TN சட்டப்பேரவை: கவர்னர் உரையாற்றுவாரா?

ஆண்டுதோறும் சட்டப்பேரவை முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபு. 2021-ல் RN ரவி பொறுப்பேற்ற பிறகு 2022-ல் மட்டுமே உரையை முழுமையாக வாசித்தார். 2023-ல் சில பகுதிகளை தவிர்த்ததால் சர்ச்சை ஏற்பட்டு பாதியில் வெளியேறினார். 2024, 2025-ல் தேசிய கீதம் பாடப்படவில்லை என உரையை வாசிக்காமலே வெளியேறினார். இந்நிலையில், நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்திலாவது உரையாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


