News November 18, 2024

பொள்ளாச்சியுடன் இணைகிறதா உடுமலை, மடத்துக்குளம்?

image

தமிழகத்தில் 2025 குடியரசு தினத்தன்று புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும் அப்போது திருப்பூர் மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தின் கிணத்துகடவு, பொள்ளாச்சி, ஆனை மலை, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் தாலுக்காக்களை பிரித்து பொள்ளாச்சி மாவட்டம் அறிவிக்கப்பட உள்ளதாகவும் சமூக வலை தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இதுபோன்று முன்பு பழனி மாவட்டமாக உருவாக்கப்பட உள்ளதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 15, 2025

திருப்பூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

image

திருப்பூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக்<<>> செய்து அப்பளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே!

News December 15, 2025

திருப்பூர் மாவட்டத்தில் 340 மனுக்கள் பெறப்பட்டன!

image

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமையில், இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 340 மனுக்களை அளித்துள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 15, 2025

திருப்பூரில் ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி!

image

திருப்பூர் 2-வது ரயில்வே கேட் பகுதியில், நேற்று மாலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். இறந்தவர் கருநீல நிற முழுக்கை சட்டையும், வெளிர் நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!