News October 14, 2024

பெரம்பலூர்: 4.21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 16 பயனாளிகளுக்கு ரூ.4. 21 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார். இந்நிகழ்வில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News July 8, 2025

வரதட்சணை கொடுமை-கணவர் குடும்பத்தினர் மீது புகார்

image

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷபானா (23) என்பவருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஹுசைன் என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினர் ஷபானாவின் 13½ பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு இன்னும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியதாக, ஷபானா நேற்று பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி-யை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார்.

News July 8, 2025

பெரம்பலூர் : மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று (ஜூலை 7) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து கோரிக்கையை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் பெற்றுக்கொண்டார். இலவச வீட்டு மனை பட்டா மற்றும் மின்னணு குடும்ப அட்டை பயனாளிகளுக்கு வழங்கினார்.

News July 7, 2025

பெரம்பலூர்: வங்கியில் வேலை! மாதம் ரூ.85,000 சம்பளம்

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் திருச்சி உட்டபட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கு <>இங்கே கிளிக்<<>> செய்து ஜூலை 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!