News November 14, 2025

பெரம்பலூர்: வரலாற்று சிறப்பு மிக்க இடம் பற்றி தெரியுமா?

image

பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் புகழ்பெற்ற தேசிய கல்மரப் பூங்கா உள்ளது. இங்கு சுமார் 120 மில்லியன் ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று கல்லாக மாறியிருக்கிறது. 1940ம் ஆண்டு தஞ்சாவூரில் இருந்து வந்த, இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின், புகழ்பெற்ற புவியியலாளரான டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணனால் இது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அனைவரும் தெரிந்து கொள்ள இதை உடனே ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 7, 2025

பெரம்பலூர்: 4வைத்து நாளாக தொடர்ந்த போராட்டம்

image

நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை நிறுத்த வேண்டியும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த முறையை தொடர்ந்து அனுமதிக்க வலியுறுத்தியும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தை வழக்கறிஞர்கள் கடந்த 3-ந்தேதி முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர். மேலும் 4-வது நாளாக நேற்று கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர். இதனால் பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்ற பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

News December 7, 2025

பெரம்பலூர் பண்ணை தொழில் செய்ய சூப்பர் வாய்ப்பு!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News December 7, 2025

பெரம்பலூர்: காவல்துறை சார்பில் வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 13 இரு சக்கர வாகனம், 1 மூன்று சக்கர வாகனம், இரண்டு நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 16 வாகனங்கள். வரும் (12.12.2025) அன்று மாவட்ட ஆயுத படை வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது. வாகனம் வாங்குவோர் வருகின்ற 10,11 ஆகிய தேதிகளில் அமலாக்கபிரிவு அலுவலகத்தில் ₹500 செலுத்து ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!