News August 10, 2025

பெரம்பலூர்: ரேஷன் கார்டில் பிரச்னையா? Don’t Worry!

image

உங்கள் ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களில் தரமின்மை, புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கு உதவி எண் செயல்பாட்டில் உள்ளது உங்களுக்குத் தெரியுமா? ஆம், 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களது ஸ்மார்ட் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் உதவி பெறலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

Similar News

News November 15, 2025

பெரம்பலூரில் TVK சார்பில் போராட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உத்தரவுபடி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், பல்வேறு குளறுபடிகளை கண்டித்து, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாளை (நவ.16) அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கு அனுமதி கோரி எஸ்பி ஆதர்ஷ் பசேராவிடம், நேற்று (நவ.14) மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமையில் மௌ அளித்தனர். இதில், தவெக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

News November 15, 2025

பெரம்பலூர்: ஆட்சியர் தொடங்கி வைத்த விழிப்புணர்வு பேரணி

image

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாள் விழாவை, குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, நேற்று குழந்தைகள் பாதுகாப்பு குறித்து “என் நாள் என் உரிமை” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி, பெரம்பலூர் பாலக்கரை அருகில், ஆட்சியர் மிருனாளினி கொடியசைத்து தொடங்க்கி வைத்தார். இதில், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News November 14, 2025

பெரம்பலூரில் TVK சார்பில் போராட்டம்!!!

image

பெரம்பலூர் மாவட்ட தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் உத்தரவுபடி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், பல்வேறு குளறுபடிகளை கண்டித்து, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் (நவ-16) அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மனுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேராவிடம், இன்று (நவ-14) மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமையில், மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் ஒன்றாக மனு அளித்தனர்.

error: Content is protected !!