News August 8, 2025
பெரம்பலூர்: ரூ.18,000 சம்பளத்தில் ஒப்பந்த செவிலியர் பணி!

பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 22 ஒப்பந்த செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு மாதம் ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
Similar News
News November 7, 2025
பெரம்பலூர் மக்கள் கவனத்திற்கு…

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மின்வாரிய கோட்ட மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் நவ.11 அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகள், குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என செயற்பொறியாளர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில், அய்யலூர், வெண்பாவூர், பெரியவெண்மணி, சிறுகன்பூர் ஆகிய கிராமங்களில் (8.11.2025) சனிக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் உணவுப் பொருள் வழங்கல் சம்பந்தமான குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
பெரம்பலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

பெரம்பலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


