News August 23, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர் மற்றும் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியில், பணிபுரிய தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை Perambalur.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு வருகிற (5.9.2025) தேதிக்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News January 18, 2026
பெரம்பலூர்: நேருக்கு நேர் மோதி விபத்து

ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த செல்வி (42), சங்கீதா (15) ஆகியோர் ஸ்கூட்டரில் அதே பகுதியில் உள்ள காட்டு கொட்டகைக்கு சென்றுள்ளனர். பின்னர் வீடு திரும்பிய போது, எதிரே வந்த மூர்த்தி (30) என்பவரது பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பெரம்பலூரில் GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
News January 18, 2026
பெரம்பலூர் மாவட்டம் – ஓர் பார்வை

▶️ மொத்த பரப்பளவு – 1,757 சதுர கி.மீ
▶️ கிராம பரப்பளவு – 1,675 சதுர கி.மீ
▶️ நகர பரப்பளவு – 82 சதுர கி.மீ
▶️ வருவாய் கோட்டம் – 1
▶️ தாலுகாக்கள் – 4
▶️ வருவாய் கிராமங்கள் – 152
▶️ கிரம பஞ்சாயத்து – 121
▶️ சட்டமன்ற தொகுதிகள் – 2
▶️ மக்களவை தொகுதிகள் – 1
▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
News January 17, 2026
பெரம்பலூர்: குழந்தை வரம் அருளும் கோயில்!

பெரம்பலூர் மாவட்டம் வெங்கனுர் பகுதில் அமைந்துள்ள விருத்தகிரீஸ்வரர் கோயில், குழந்தை வரம் தரும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான விருத்தகிரீஸ்வரருக்கு பாலபிஷேகம் செய்து, புதிய வஸ்திரம் சாற்றி, தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!


