News October 10, 2024
பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் கடையில் பணிபுரிய வாய்ப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனையாளர் (Salesman), கட்டுநர்கள் (Packer) ஆகிய 31 பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இப்பணிக்கு www.drbpblr.net என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் நவ.7ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யவும்.
Similar News
News November 8, 2025
பெரம்பலூர்: “Coffee With Collector” – மாணவர்களை சந்தித்த ஆட்சியர்!

அரசுப் பள்ளி மாணவர்கள் தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலும், படிப்பு விளையாட்டு பொது அறிவு, கலை உள்ளிட்ட பல்வேறு திறன்களில் தங்களை வளர்த்துக் கொள்ளும் ஆர்வத்தை கொடுக்கும் வகையிலும் “Coffee With Collector” என்ற நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இமாவட்ட ஆட்சியருடன் மாணவர்கள் சந்தித்து கலந்துரையாடினர் .
News November 8, 2025
பெரம்பலூர்: அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் 3 ரோடு மேம்பாலம் அருகே நேற்று 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News November 8, 2025
பெரம்பலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.7) இரவு 10 மணி முதல் இன்று (நவ.8) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


