News January 13, 2025
பெரம்பலூர்: மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 76 மனுக்கள்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 76 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக்கொண்டார். வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
Similar News
News November 17, 2025
தமிழ்நாட்டில் பெரம்பலூர் முதலிடம்

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை, மொத்தம் 5,90,490 வாக்காளர்களுக்கு கணக்கிட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 5,87,192 (99.44%) வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்த கணக்கெடுப்பு படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் பிரத்தியேக செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
News November 17, 2025
பெரம்பலூர் தமிழ்நாட்டில் முதலிடம்

பெரம்பலூர் மாவட்டத்தில், மொத்தம் 5,90,490 வாக்காளர்களுக்கு இதுவரை கணக்கிட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக 5,87,192 (99.44%) 1,21,773 (20.62%) வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்த கணக்கெடுப்பு படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் பிரத்தியேக செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
News November 16, 2025
பெரம்பலூரில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு – தாள். 2, நடைபெற்றதைப் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பார்வையிட்டார். அவருடன் பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் அவர்களும் உடன் இருந்தார். பல்வேறு மையங்களில் நடைபெற்ற தேர்வுகளை மாவட்டக்கல்வி அலுவலர்கள் செல்வக்குமார், இலதா கெளசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


