News November 26, 2025

பெரம்பலூர்: புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் அமைச்சர்

image

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து சேவைகளை தொடக்கி வைப்பதற்காகவும், பால் குளிரூட்டும் மையத்தை திறந்து வைப்பதற்காகவும், வட்டாட்சியர் அலுவலக மேம்பாடு பணியை துவக்கி வைப்பதற்காகவும் போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சா சி சிவசங்கர் இன்று குன்னம் பகுதிக்கு வருகை தர உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 22, 2026

பெரம்பலூர்: வருவாய்த்துறை சார்பில் தர்ணா

image

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஒருங்கிணைப்பாளர் பாரதிவளவன் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. வருவாய்த்துறையினருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதிய உயர்வு, அரசின் புதிய திட்டங்களை செயல்படுத்த தனியாக பணியாளர்களை நியமிக்கவும், அதனை செயல்படுத்த கால அவகாசம் வழங்கவும், காலிபணியிடங்களை நிரப்பிடவும், பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.

News January 22, 2026

பெரம்பலூர்: பண்ணை தொழிலுக்கு ரூ.20 லட்சம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு!

image

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் இன்று (22-01-2026) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக பாலகரை நான்கு ரோடு, மின் நகர், அறனாரை, எளம்பலூர் மற்றும் பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் இணைப்பு பெறும் அனைத்து பகுதிகளிலும் காலை இன்று 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரையும் மின்தடை ஏற்படும் என துணை மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!