News April 6, 2024
பெரம்பலூர்: பதற்றமான சாவடிகள் எண்ணிக்கை வெளியீடு

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 55 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என எதுவும் இல்லை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏப்.19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 7, 2026
பெரம்பலூர்: குரூப்-2, 2 ஏ தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

பெரம்பலூர் மாவட்டத்தில் குரூப்-2, 2 ஏ முதன்மை எழுத்து தேர்வுகள் நாளை காலை மற்றும் மதியம் ஆகிய இருவேளைகளில் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. தேர்வர்களுக்காக போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வு எழுதுவோர் நேரத்திற்குள் வரவேண்டுமெனவும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் எடுத்துவரக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE
News February 7, 2026
பெரம்பலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை (தெற்கு) கிராமத்தில் வருகிற பிப்.11ஆம் தேதி மாவட்ட கலெக்டரின் தலைமையில் மக்கள் தொடர்பு திட்டமுகாம் நடைபெறுகிறது. இதற்காக பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், இம்முகாமில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News February 7, 2026
பெரம்பலூர் : இரவு நேர காவலர் ரோந்து பணி விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.06) இரவு 10 முதல் இன்று (பிப்.07) காலை 8 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.


