News November 26, 2025
பெரம்பலூர்: கோயிலுக்கு சென்றவர் பரிதாப பலி

சேலத்தை சேர்ந்தவர் கருப்பையா சபரிமலைக்கு மாலை அணிந்திருந்தார். இவரும், இவரது நண்பரான அதே ஊரை சேர்ந்த காளிமுத்துவும் சபரிமலை அய்யப்பசாமி கோவிலுக்கு யாத்திரை செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் நான்குரோடு சந்திப்பில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கார், கருப்பையா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் கருப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News January 13, 2026
பெரம்பலூர் மாவட்ட MLA எண்கள்!

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் என இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த இரண்டு சட்டமன்றத் தொகுதிகளின் உறுப்பினர்களின் தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை இங்கு அறிந்துகொள்ளலாம்.
1.பெரம்பலூர் (தனி) – எம். பிரபாகரன் – 9786660160 – mlaperambalur@tn.gov.in
2.குன்னம் – எஸ்.எஸ்.சிவசங்கர் – 9443142600 – mlakunnam@tn.gov.in
இதனை உங்களது உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க…
News January 13, 2026
மாசு இல்லாத போகி பண்டிகை கொண்டாட வலியுறுத்தல்

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் போகிப் பண்டிகைக்கு முன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன்படி பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையை கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News January 12, 2026
பெரம்பலூர் மக்களே உங்களுக்கு தெரியுமா?

கண்ணகி தன் கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு கோபம் கொண்டு மதுரையை எரித்த பின், மன அமைதியின்றி அலைந்து கொண்டிருக்கையில் சிறுவாச்சூரில் அமைதி கொண்டாள் எனவும், கண்ணகியைக் கொண்டு மதுரையை எரியூட்டிய மதுரை காளியம்மனே இத்தலம் விரும்பி அமர்ந்தாள் எனவும் கூறப்படுகிறது. மதுரை காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக வந்ததாகக் கூறப்படுகிறது. SHARE பண்ணுங்க.


