News May 7, 2025
பெரம்பலூர்: உணவு குறித்து புகார் அளிக்க புது App

உணவகம், பேக்கரிகளில் உள்ள தரமற்ற உணவு குறித்து மக்கள் புகார் அளிக்க ‘TN FOOD SAFETY CONSUMER’ எனும் செயலியை அரசு வெளியிட்டுள்ளது. இந்த செயலியின் மூலமாக கலப்படம், தரமற்ற உணவு குறித்து டைப் ஏதும் செய்யமால் மிக எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்தில் உணவு பாதுகாப்பு துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்!
Similar News
News November 13, 2025
பெரம்பலூர்: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு…

பெரம்பலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்த உங்களது புகார் மற்றும் குறைகளை 0435- 2403724-26 என்ற கும்பகோணம் போக்குவரத்து கழக எண்ணில் தெரிவிக்கலாம். பேருந்து காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் அல்லது நடத்துநர் பயணிகளிடம் அநாகரீமாக செயல்படுவது உள்ளிட்டவை குறித்து நீங்கள் புகார் தெரிவிக்கலாம். இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 13, 2025
பெரம்பலூர் ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு பிரச்சாரம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(நவ.12) மாலை 6.30 மணியளவில் ஜாக்டோ- ஜியோ உயர் மட்டக்குழு உறுப்பினர், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கத்தின் மாநில செயலாளர் தோழர் இளவரசன் மற்றும் மாவட்ட தலைவர் குமரி ஆனந்தன் உட்பட சங்க உறுப்பினர்கள் வருகின்ற (நவ-18) அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு ஆதாரவு தர வேண்டி பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.
News November 13, 2025
பெரம்பலூர்: மீன் வளர்க்க மானியம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் சார்பாக புதிய மீன் வளர்ப்பு குளங்கள், புதிய நன்னீர் மீன் வளர்ப்பு பயோ பிளாக் தொட்டிகள், கொல்லைப்புற அலங்கார மீன் வளர்ப்பு திட்டங்களில் பொதுப்பிரிவிற்கு 40 மற்றும் மகளிர் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மீன் வளர்ப்பில் ஈடுபட ஆர்வமுடையோர் மீனவர் நலத்துறையை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


