News March 23, 2024
பெரம்பலூரில் பங்குனி உத்திர திருவிழா

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீமதனகோபால சுவாமி பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழாவினை முன்னிட்டு, விழாவின் முக்கிய நிகழ்வான 7ம்நாள் திருக்கல்யாணம் நேற்று மாலை 6 மணி அளவில் மங்கள வாத்திய முழங்க பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட திருக்கல்யாணம் வெகு விமர்சியாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News November 11, 2025
பெரம்பலூர்: 3 சக்கர நாற்காளிகளை வழங்கிய ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இதில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.11,500 மதிப்பில் 3 சக்கர நாற்காளிகளை ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 103 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
News November 11, 2025
பெரம்பலூர்: ரயில்வேயில் வேலை… ரூ.29,735 சம்பளம்!

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6.கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 11, 2025
மாநில உணவு ஆணைய மண்டல ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் மண்டல ஆய்வுக் கூட்டம், அதன் தலைவர் சுரேஷ் ராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தக் கூட்டத்தில், உணவு ஆணையம் சார்ந்த பணிகள் மற்றும் திட்டங்களை ஆக்கப்பூர்வமாக முன்னெடுப்பது குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.


