News August 4, 2024
பென்னாகரம் தொகுதியில் வார்டு உறுப்பினர் ஆய்வு

பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் கெண்டையணள்ளி ஊராட்சியில் உள்ள புதூர் அரசு நடுநிலைப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் 4.5 லட்ச மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுற்று சுவர் அமைக்கப்பட்டது. பணிகள் நிறைவு பெற்றதை நேரில் சென்று ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தேவராஜ் இன்று ஆய்வு செய்தார். ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
Similar News
News January 21, 2026
தருமபுரி: விடுமுறைக்கு வந்து பிணமாக திரும்பிய வாலிபர்!

திண்டுக்கல் அடுத்த ரத்தினகிரி கிராமத்தை சேர்ந்தவர் சுகன் (21). பெங்களூரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், பொங்கல் பண்டிகை முடிந்து நேற்று (ஜன.21) பெங்களூருக்கு புறப்பட்டார். அப்போது தருமபுரி, கொலசனஅள்ளி அருகே சென்றபோது பைக் சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானாது. இதில் சுகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 21, 2026
தருமபுரியில் துடிதுடித்து பலி!

சிக்கமாரண்டஅள்ளியை சேர்ந்த விவசாயி மாதேசன் (29). இவர் கொலசனஅள்ளி தனியார் கண் மருத்துவமனை அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, பைக் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த மாதேசன், பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த மாரண்ட அள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 21, 2026
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இன்று (ஜன.20) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் உலகநாதன், தொப்பூரில் ராமகிருஷ்ணன் , மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர்!


