News November 20, 2024
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் 6,436 பேர் பயன்!

பெண் சிசுக்கொலையை தடுக்க உருவான “முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு” திட்டத்தில் 2021-22ம் ஆண்டில் 1,948 பேரும், 2022-23ல் 2,242 பேரும், 2023-24ல் 1,771 பேரும், 2024-25.ல் இதுவரை 475 பேர் என மொத்தம் 6,436 பெண் குழந்தைகள் பயன் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ.16.10 கோடி மதிப்பில் வைப்புத்தொகை பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சமூக நலன், மகளிர் உரிமைத்துறை மாவட்ட அதிகாரி விஜய மீனா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
குமரியில் மீனவர்கள் கவலை

குளச்சல் பகுதியில் 300 விசைபடகுகளும், 1000க்கும் மேல் வள்ளம், கட்டுமரங்களும் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. நேற்று மீனவர்கள் வலையில் அதிக அளவில் சாளை மீன்கள் சிக்கின. அவற்றை குளச்சல் ஏல கூடத்தில் ஏலமிட்டபோது ஒரு குட்டை சாளை மீன் ரூ.700 முதல் ரூ.800 விலை போனது. ஏலம் போகாத மீன்களை ரூ.100 விலையில் சிறு கூறுகளாக விற்றனர். அதிக மீன்கள் கிடைத்தும் போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.
News November 8, 2025
குமரி: பைக் விபத்தில் வாலிபர் பலி

கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூரில் இருந்து முள்ளுவிளை நோக்கி வாலிபர் பைத்தில் சென்றுகொண்டிருந்தார். பைக் ரோட்டில் கிடந்த பள்ளத்தில் சிக்கி நிலைதடுமாறி வாலிபர் கிழே விழுந்தார். தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலே வாலிபர் உயிரிழந்தார். விபத்துக்குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 8, 2025
குமரி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <


