News November 19, 2024

பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் ஒருவர் கைது

image

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள தனியார் திரையரங்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த ரஹீம் என்பவரை இன்று கைது செய்துள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 16, 2025

நெல்லை முன்னாள் துணை மேயர் மறைவு

image

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் அதிமுக துணை மேயரும், தற்போதைய 30வது வார்டு கவுன்சிலருமான P.ஜெகநாதன் என்ற கணேசன் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருடைய மறைவு குறித்து அதிமுக நெல்லை மாவட்ட செயலாளார் தச்சை N.கணேச ராஜா மற்றும் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை அவருடைய குடும்பத்திற்கு தெரிவித்துள்ளனர்.

News December 16, 2025

நெல்லை: பெட்ரோல் குண்டு வீச்சு.. சிறுவர்கள் கைது

image

வி.கேபுரம் அருகே அம்பலவாணபுரம் நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்த மதன் (21) என்பவரின் விலை உயர்ந்த பைக்கை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தனர். திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 4 சிறுவர்கள் மற்றும் மணிகண்டன் (20) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.சிறுவன் பெட்ரோல் குண்டு வீசியதை ஒப்புக்கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

News December 16, 2025

நெல்லை: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா? APPLY NOW

image

நெல்லை மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். மறக்காம SHARE பண்ணுங்க

error: Content is protected !!