News August 19, 2024

பூங்காவை சுற்றி பார்க்க பேட்டரி கார்கள்

image

புதுவை பூங்காவை சுற்றி பார்க்க ‘மார்வெல்லா விண்டேஜ் பகி’ என்ற நான்கு பேட்டரி கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இவை தாவரவியல் பூங்காவிற்கு தற்போது கொண்டு வரப்பட்டுள்ளன. இவை பார்ப்பதற்கு பழங்கால கார்கள் வடிவை ஒத்து இருக்கின்றன. ஒவ்வொரு காரிலும் 8 பேர் வரை அமரலாம். ஒவ்வொரு பேட்டரி கார்களின் விலை ரூ.8,76,572 .வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள் இதில் பயணிக்கலாம்.

Similar News

News January 15, 2026

புதுச்சேரி: போஸ்டரால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

image

புதுவையில் சார்லஸ் மார்ட்டின் எல்ஜேகே என்ற புதிய அரசியல் கட்சி ஆரம்பித்து, தேர்தல் அரசியல் பணிகளை செய்து வருகிறார். அவரது கட்சியில் பலரும் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் அவரை சீண்டுவது போல முதல்வர் ரங்கசாமி ஆதரவாளர்களின் சார்பில் “லாட்டரி விற்பனைக்கு அரசு அனுமதி வேண்டுவோர், ஆட்சிக்கு வர நினைப்போர் உள்ளே அனுமதி இல்லை” என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 15, 2026

புதுச்சேரி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

புதுச்சேரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்கு RTO அலுவலகம் செல்லா வேண்டாம். இந்த <>லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

News January 15, 2026

புதுச்சேரி: இலவசமாக அரிசி வேண்டுமா?

image

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் கீழ் வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதற்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை பதிவு செய்து இலவசமாக பெறலாம். அட்டையிருந்தும் வழங்கவில்லை என்றால் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் புகாரளிக்கலாம். SHARE!

error: Content is protected !!