News November 26, 2025

புழல் ஏரியில் தவறி விழுந்த முதியவர் பலி

image

சென்னை, செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஆர்.கோவிந்தன் (75) மீன்பிடி தொழில் செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் புழல் ஏரியில் இருந்து வரும் உபரி நீர் கால்வாயில், தூண்டில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த செங்குன்றம் போலீசார், உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News January 17, 2026

‘மெட்ராஸை’ சுற்றிப் பார்க்க ஆசையா? ரூ.50 போதும்!

image

சென்னையை சுற்றிப் பார்க்க ஆசையா? அதிகமா பணம் செலவாகும்னு நினைக்கிறீங்களா? அதான் இல்ல. MTC ‘சென்னை உலா’ என்ற ‘வின்டேஜ்’ ஸ்டைல் பேருந்து சேவையை துவக்கியுள்ளது. இதில் சென்னை சென்ட்ரலிலிருந்து வள்ளுவர் கோட்டம், கண்ணகி சிலை வழியாக பல்லவன் இல்லம் வரை 16 இடங்களுக்கு செல்ல, ரூ.50 தான் கட்டணம். ஒரு டிக்கெட்டில் எங்க வேணும்னாலும் ஏறலாம், இறங்கலாம். <>இங்கு க்ளிக்<<>> செய்து ஆன்லைன் டிக்கெட் புக் செய்யலாம். ஷேர்!

News January 17, 2026

சென்னை: தலை நசுங்கி கல்லூரி மாணவன் பலி!

image

சென்னை, மாதவரத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (20). கல்லூரி மாணவரான இவர், நேற்று மதியம் பாடிக்குப்பம் சாலையில் டூவீலரில் சென்ற போது முன்னால் சென்ற தண்ணீர் லாரியை முந்திச்செல்ல முயன்றார். அப்போது லாரியின் மீது டூவீலர் உரசி நிலைதடுமாறி கீழே விழுந்ததில், லாரியின் சக்கரம் மாணவர் மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி உயிரிழந்தார். இது குறித்து போலீசார், லாரி டிரைவர் வெங்கடேசனை (56) கைது செய்து விசாரிக்கின்றனர்.

News January 17, 2026

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் (ஜன.16) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!