News November 3, 2025
புயல் சின்னம்.. மழை பொளந்து கட்டும்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், வட தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரத்தில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. மேலும், நவ.9 வரை தமிழகத்தில் மழை தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமாக இருங்க!
Similar News
News December 7, 2025
கற்பனையின் உச்சம்! சினிமாவின் அற்புதம்!

நம்மால் செய்ய முடியாத அல்லது செய்ய விரும்பும் பலவற்றை கண்முன்னே நிறுத்துவது கற்பனை உலகங்களே! மேஜிக், சூப்பர்ஹீரோ, பேசும் விலங்குகள், மாயாஜால நாடுகள் என கற்பனை உலகில் எதை வேண்டுமானாலும் நிஜமாக்கலாம். இப்படிப்பட்ட கற்பனை உலகங்களை மையமாக வைத்து உலக அளவில் புகழ்பெற்ற, வசூலில் சாதனை படைத்த பல Movie Franchises-கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை அறிய மேலே SWIPE பண்ணி பாருங்க. இதில் உங்க ஃபேவரட் எது?
News December 7, 2025
டெலிகிராம்ல Free-ஆ மொழிகள் கத்துக்கலாமா?

டெலிகிராம் மெசேஜ் அனுப்ப மட்டுமே பயன்படும் சாதாரண செயலி அல்ல. இதில் இருக்கும் Bots அன்றாடம் உங்களுக்கு தேவையான பல சேவைகளை வழங்குகிறது. 1. YSaver – இந்த Bot-ல் உங்களுக்கு தேவைப்படும் யூடியூப் Link-ஐ கொடுத்தால் அது அந்த வீடியோவை டவுன்லோடு செய்து கொடுக்கும். 2. AI IMAGE GENERATOR – இதில் AI புகைப்படங்களை இலவசமாக பெறலாம். 3. Learn Languages AI – இதில் பல மொழிகளை இலவசமாக கற்றுக்கொள்ளலாம். SHARE.
News December 7, 2025
மீண்டும் NDA கூட்டணியில் அமமுகவா? டிடிவி பதில்

அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என்று டெல்லி பாஜகவினர் மத்தியஸ்தம் செய்வதில் எந்த தவறும் இல்லை என டிடிவி தெரிவித்துள்ளார். இந்த கருத்து மூலம் மீண்டும் NDA கூட்டணியில் டிடிவி இணைகிறாரா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கூட்டணி குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. பொறுத்திருந்து பாருங்கள், தேர்தலுக்குள் பல மாற்றங்கள் நடக்கும் என்றார்.


