News March 29, 2024

புதுவை முதல்வர் பிரச்சாரம்

image

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் தொகுதி தேங்காய்திட்டு முத்து மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பாஜக பாராளுமன்ற வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து மத்திய, மாநில அரசு சாதனைகளை எடுத்துக்கூறி பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் ஏராளமான தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News January 17, 2026

புதுச்சேரியில் விடுமுறை அறிவிப்பு!

image

சனிக்கிழமை விடுமுறை தினமாக இருந்தாலும், இன்று (ஜன.17) 3வது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் இயங்க வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி வங்கி ஊழியர்களுக்கும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று (ஜன.17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் உள்ள வங்கிகள் இன்று இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 17, 2026

புதுவையில் ஆண்களுக்கான பொங்கல் விழா!

image

புதுவை மாநிலம் வானூர் அருகே அமைந்துள்ள வீரனார் கோயிலில், ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் வினோத திருவிழா நடைபெற்றது. இதில் பொங்கல் வைப்பதற்காக ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் ஒன்றிணைந்து, பானைகளை ஊர்வலமாக எடுத்து வந்து குளக்கரையில் பொங்கல் வைத்தனர். பின்பு பொங்கலை படையலிட்டு ஆண்கள் மட்டுமே உண்டனர். இப்பழக்கம் தங்களது மூதாதையர் காலத்தில் இருந்து தொன்று தொட்டு நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.

News January 16, 2026

புதுச்சேரி: செல்வம் செழிக்க இங்கு செல்லுங்கள்!

image

புதுச்சேரியில் வரதராஜ பெருமாள் கோயில் அமைத்துள்ளது. இக்கோயிலில் சென்று வழிபடுவதால் கல்வி, செல்வம், குடும்ப நலன், திருமணம் கைகூடுதல், நோய்கள் நீங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, முதல் குழந்தைக்கு அன்னப்ராசனம் செய்தல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!