News October 1, 2025
புதுவை மாணவர்களுக்கு குட் நியூஸ்!

புதுச்சேரியில் அனைத்து உயர்கல்விக்கும் அரசு ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி அளிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதை ஏற்று அனைத்து உயர்கல்விக்கும் விலக்கு அளிக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். பின்னர், அதற்கான அரசாணை வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று கவர்னர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
Similar News
News December 14, 2025
புதுவை: மன உளைச்சலில் கொத்தனார் தற்கொலை

புதுவை முருங்கம்பாக்கம் கணபதி நகரை சேர்ந்தவர் தண்டபாணி (61). கட்டிட தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இந்நிலையில் நோய் கொடுமையால் தண்டபாணி கடும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், எலி பேஸ்ட்டை உட்கொண்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 14, 2025
புதுவை: போலிச்சான்றிதழ் கொடுத்தவர் மீது வழக்கு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில், கேரளாவை சேர்ந்த சித்திக் (21) M.Com படிப்பதற்காக விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் அவரின் சான்றிதழை சரிபார்த்த போது, அவை போலி சான்றிதழ்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பல்கலைக்கழக கண்காணிப்பு குழு சிறப்பு அதிகாரி வம்சிதரரெட்டி அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 14, 2025
புதுவை: போதை பொருள் கடத்திய 2 பேர் கைது

புதுவை கரையாம்புத்தூரில், 65 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருள் பிடிபட்டது. காவல்துறை வாகன தணிக்கையில் சொகு சுகாரில் இருந்த 4 பேர் தப்பியோட முயன்ற போது 1-வர் மட்டும் பிடிபட்ட நிலையில், கிருஷ்ணகிரியில் இருந்து கடத்திவரப்பட்ட போதை பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. இந்நிலையில் பிடிபட்ட நபர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 2 பேரை கைது செய்து, 1 சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.


