News August 20, 2024

புதுவை மருத்துவமனையில் குறட்டை பிரச்சனைக்கு நவீன வசதி

image

புதுவை இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவின் கீழ் உறக்கத்தின் போது, குறட்டை ஏற்படும் பிரச்சனையை கண்டறிய ரூ.35 லட்சம் மதிப்பில் நவீன ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. குறட்டை பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆய்வகத்தில் இலவசமாக சோதனை செய்து, காது, மூக்கு, தொண்டை, மருத்துவரை அணுகலாம்- புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளது.

Similar News

News January 16, 2026

புதுவை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

புதுவை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas.com<<>> என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

News January 16, 2026

புதுவை: அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கை

image

புதுச்சேரி சட்டசபைத் தேர்தலுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன. ஆகவே தேர்தல் பணியில் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதனை முன்னிட்டு, சட்டசபைத் தேர்தல் தொடர்பான பணிகளுக்காக அரசு ஊழியர்களின் விவரங்களை 19-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்துத் துறைகளுக்கும் கணக்கு மற்றும் கருவூலக துறை மூலமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News January 16, 2026

புதுவை: நண்பரை பீர் பாட்டிலால் தாக்கிய இளைஞர்

image

வாணரப்பேட்டை சேர்ந்தவர் பிரகாஷ். ஓட்டுநரான இவர், தனது நண்பரான பூமியான்பேட்டையைச் சேர்ந்த தமிழ்மணி, என்பவருடன் உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் ஜன.14 மாலை மது அருந்தியுள்ளார். அப்போது, மதுபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த தமிழ்மணி, பிரகாஷை தகாத வார்த்தையால் திட்டி, பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் தமிழ்மணியை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!