News September 30, 2025

புதுவை: மத்திய அரசு வேலை..Apply பண்ணுங்க!

image

புதுச்சேரி: மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள பெண் செவிலியர், விடுதி காப்பாளர், கணக்காளர், இளநிலை செயலக உதவியாளர், ஆய்வக உதவியாளர் போன்ற பல்வேறு பணிகள் நிரப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 23.10.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News December 10, 2025

புதுவை: அமைச்சு பணியாளர்களுக்கு தேர்வு

image

புதுவை அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் அமைச்சு பணியாளர்களுக்கான துறைசார் தேர்வு டிச.14-ம் தேதி புதுவை காரைக்கால், மாஹே, ஏனாம், புதுடெல்லியில் நடைபெறுகிறது. இதற்கான ஹால்டிக்கெட்டுகளை புதுவையில் தலைமை செயலகத்தில் உள்ள தேர்வு அறை அலுவலகத்தில் தங்களது அலுவலக அடையாள அட்டை, பான் கார்டு, ஆதார் கார்டு ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 10, 2025

அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

image

புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “புதுச்சேரி அரசில் பணியாற்றி வரும் குரூப் ஏ மற்றும் பி பிரிவு அரசு ஊழியர்களின் 2025-ம் ஆண்டிற்கான வருடாந்திர அசையா சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, வரும் 1-ம் தேதி முதல் 31-ம் தேதிக்குள் http://esalary.py.gov.in/ipr என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்.” என கூறப்பட்டுள்ளது.

News December 10, 2025

புதுவை கல்வித்துறையின் பணி மூப்பு பட்டியல் வெளியீடு

image

புதுவை கல்வித்துறையில் பணியாற்றி வரும் துணை முதல்வர்கள், ஆசிரியர்களின் பணி மூப்பு பட்டியல், பதவி உயர்வுக்காக தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2025 (இந்த ஆண்டு) வரை துணை முதல்வராக பணியில் சேர்ந்த 82 பேரின் பணி மூப்பு பட்டியல் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை புதுவை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் (நிர்வாகம்) வெர்பினா ஜெயராஜ் பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!