News October 10, 2025
புதுவை: போலி ஆவணங்கள் தயாரித்த ஜோதிடர் கைது

புதுவை குடிசை மாற்று வாரியத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் மணிவண்ணன். இவர் பதவி உயர்வுக்காக போலி கல்வி சான்றிதழ், டி.சி.ஏ சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து பதவி உயர்வு பெற்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து, மணிவண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு போலி ஆவணங்களை தயாரித்துக் கொடுத்த முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த ஜோதிடர் கோவிந்தனை நேற்று கைது செய்தனர்.
Similar News
News November 12, 2025
புதுவை: சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் சிறை

காரைக்கால் மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது குற்றமாகும். அதனை மீறி சிறார்கள் வாகனம் ஓட்டினால் அவர்களது பெற்றோர் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு ரூ.25,000 அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று காரைக்கால் மாவட்டம் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News November 12, 2025
காரைக்காலில் குறைதீர்ப்பு முகாம் அறிவிப்பு!

காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் செயலர் பொன் பாஸ்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி ஆளுநர் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் காரைக்கால் மாவட்டத்தில் வரும் 17.11.2025 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில், ஆட்சியர் வளாகத்தில் காலை 09:30 மணி முதல் பிற்பகல் 12:00 மணி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
புதுவை: டெல்லி குண்டுவெடிப்புக்கு முதல்வர் இரங்கல்

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், டெல்லி செங்கோட்டை அருகில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதும், பலர் படுகாயமடைந்துள்ளதும் மிகுந்த வருத்தத்தையும், துயரத்தையும் அளிப்பதாக உள்ளது. தேச ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான இச்செயல் மிகுந்த கண்டனத்திற்குரியது. உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்றார்.


