News October 1, 2025

புதுவை: பெட்டிக்கடை உரிமையாளர்கள் மீது வழக்கு

image

கரையாம்புத்தூர் போலீசார், மணமேடு கிராமத்தில் உள்ள பெட்டிக்கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது 8 கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 8 பெட்டிக்கடைகளில் இருந்து மொத்தம் ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து பெட்டிக்கடை உரிமையாளர்கள் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

Similar News

News December 12, 2025

புதுவை: மருத்துவக் கல்லூரியில் சேர அவகாசம்

image

புதுவையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு முதல் சுற்று இட ஒதுக்கீடு பட்டியலை சென்டாக் வெளியிட்டது. அதன்படி 283 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் 11-ம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த கால அவகாசம் தற்போது 13-ம் தேதி மாலை 5மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.

News December 12, 2025

புதுவை: தகராறில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

image

புதுவை மங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உறுவையாறு புதிய பைபாஸ் சாலையில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த அருள்பிரகாஷ் (29), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கவியரசன் (35) ஆகியோரை மங்கலம் போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!