News August 20, 2024

புதுவை நபரிடம் ரூ.39.02 லட்சம் மோசடி

image

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த சபரி கிரிஜா என்பவரை மர்ம நபர் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளார். இதைநம்பி சபரி கிரிஜாவும் மர்ம நபர் அனுப்பிய இணையதளத்தில் ரூ.39.02 லட்சத்தை முதலீடு செய்து மோசடி கும்பலிடம் பணத்தை இழந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 24, 2026

புதுவை: வாக்குப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை

image

சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் & வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரங்களின் முதல் கட்ட பரிசோதனை நேற்று நடைபெற்றது. அதன்படி, ரெட்டியாா்பாளையம் தேர்தல் துறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

News January 24, 2026

புதுவை: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

image

புதுவை மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும்.

News January 24, 2026

திருப்பதி – புதுச்சேரி இடையேயான ரயில் நேரம் மாற்றம்

image

திருப்பதி – புதுச்சேரி இடையே இயக்கப்படும் தினசரி மெமு விரைவு ரயில் (வண்டி எண்: 16111) கால அட்டவணையில் குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நேர மாற்றம் வரும் குடியரசு தினமான ஜன.26 முதல் நடைமுறைக்கு வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மதுராந்தகம் மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய நிலையங்களில் ரயில் வந்து சேரும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!